பொது அமைதியை முன்னெடுப்பது தொடர்பாக ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு சபாநாயகரினால் அறிவிப்பு

நாட்டில் பொது அமைதியை பேணுவதற்கு அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

பாராளுமன்ற அமர்வு இன்று (08)  காலை 9.30 மணியளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது. இதனையடுத்து சபாநாயகர் இந்த உத்தரவை சபையில் அறிவித்தார்.

பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களையும் அழைத்து ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.