மாஸ்கோ: இந்திய- ரஷ்ய நாடுகள் இணைந்து வர்த்தகத்தை விரிவுபடுத்த பாடுபட்டு வருகின்றன என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
சந்திப்பு
:
மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். பிறகு ஜெய்சங்கர் கூறியவதாவது: இந்தியா- ரஷ்யா இரு நாடுகளும் இணைந்து வர்த்தகத்தை விரிவுபடுத்த பாடுபடுகின்றன.
வர்த்தக ஏற்றத்தாழ்வு குறித்து இந்தியாவும், ரஷ்யாவும் இயல்பாகவே கவலைப்படுகிறது. பிரதமர் மோடியும் அதிபர் புடினும், கடந்த செப்டம்பர் மாதம் சமர்கண்டில் சந்தித்தனர். பல்வேறு நிலைகளில் நமது அரசாங்கங்களுக்கு இடையே வலுவான மற்றும் தொடர் தொடர்புகள் உள்ளன.
உக்ரைன் மோதலின் விளைவுகளை நாம் இப்போது பார்க்கிறோம். போரின் காரணமாக பயங்கரவாதம் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இவை நாட்டின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஆப்கானிஸ்தானின் நிலைமை உலகம் மறந்துவிடக் கூடாது. அந்நாட்டிற்கு, உணவு, மருந்துகள், தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானை தாண்டியும் பயங்கரவாதம் நிலவி வருவதை சர்வதேச சமுதாயம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement