இன்றைய காலத்தில் பலருக்கு பெரும் தொல்லையாக இருப்பது பொடுகு பிரச்சினை தான்.
இதற்கு முக்கிய காரணம் ஹார்மோன் கோளாறுகள், கூந்தலில் சரியில்லாத பராமறிப்பு, தவறான உணவு பழக்கம், டென்ஷன், பரம்பரைத்தன்மையும் கூட.
தலை, கண் புருவம், மூக்கு, உதடு, காதின் பின்பகுதி, நெஞ்சு போன்ற பகுதிகளில் இது வரலாம். பின்னர் இது பொடுகு போல மாறும். அரிப்பு ஏற்படும், முடி உதிரும்.
இதனை ஒரு சில எளிய வழிகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- அரை கப் கற்றாழை ஜெல்லுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து உச்சந்தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து மிதமாக சூட்டில் குளிக்கலாம். வாரத்திற்கு ஒருமுறை தடவி குளித்து வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும். பொடுகு நீங்குவதோடு உச்சந்தலை அரிப்பும் நீங்கும்.
- ஒரு கப் கற்றாழையுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து இரண்டு டீ ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன் நன்றாக கலக்கவும். இதை உச்சந்தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் மைல்டான ஷாம்பு சேர்த்து சுத்தம் செய்யவும்.
-
இரண்டு டீஸ்பூன் கற்றாழையுடன் ஒரு டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒரு கப் தயிர் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளுங்கள். இதை கூந்தலின் வேர் முதல் நுனி வரை தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து மிதமான சூட்டில் தண்னீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு ஒருமுறை செய்து வர நல்ல பலனை கொடுக்கும்.