புனித் ராஜ்குமார் படத்திற்கு கட்டணம் குறைப்பு

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படம். கந்ததாகுடி. கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதிகளையும், அதன் அழகையும் காட்சிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்தை புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வின் புனித்ராஜ்குமார் தயாரித்திருந்தார். இதனை அமோகவர்ஷா இயக்கியிருந்தார்.

இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பிரதமர் மோடி பாராட்டி இருந்தார். கர்நாடக அரசு படத்திற்கு வரிவிலக்கு அளித்தது. இந்த நிலையில் படத்தின் கட்டணத்தை குறைத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் அஸ்வின் புனித் ராஜ்குமார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடகம் முழுவதும் திங்கள் முதல் வியாழன் வரை அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விலை குறைக்கப்படும். குழந்தைகள் முன்வந்து இந்த படத்தை அதிகமாக பார்க்க வேண்டும் என்பது புனித்தின் கனவு. அதன் காரணமாகத்தான் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. சாதாரண திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் 56 ரூபாய் ஆகவும், மல்டிப்ளக்ஸ் திரைகளில் டிக்கெட் கட்டணம் 112 ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அஸ்வினி எழுதியிருக்கிறார். இது வழக்கமான கட்டணத்தை விட 50 சதவிகிதம் குறைவாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.