கிருத்துவர் என்பதே தெரியாது!
இந்து மதத்தை சாராதவருக்கு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஊழியராக பணிபுரியும் அப்பு ராஜா என்பவர் திருமணம் கடந்த நவம்பர் 7ஆம் தேதி நடப்பதாக இருந்தது. அவர் வழங்கிய திருமண அழைப்பிதழில் மணமகனின் உறவினர்கள் என அந்தோணியம்மாள், அல்போன்சா போன்ற கிறிஸ்தவ பெயர்கள் இடம் பெற்றிருந்தது.
இதனை அடுத்து சென்னை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் அப்புராஜா பற்றி விசாரித்த பொழுது அவர் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர் என்பது தெரியவந்தது. மேலும் அப்பு ராஜா மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உதவியாளர் பணியில் உள்ளார் என்பதும் திமுக மயிலை பகுதி மாணவரணி துணை அமைப்பாளர் என்பதும் தெரியவந்தது.
இந்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் மயிலாப்பூர் கோவில் இணை ஆணையர் காவிரிக்கு கடிதம் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைத்துறை சட்டத்தின் படி கோயில்களில் இந்து அல்லாதவரின் திருமணம் நடக்க அனுமதி வழங்கக் கூடாது என நீதிமன்றங்களும் வலுவத்தியுள்ளன. இதனையும் மீறி கிருத்தவரின் திருமணம் நடைபெற்றால் நீதிமன்றம் நாடப்போவதாக இந்து முன்னணி நிர்வாகி கடிதம் மூலம் புகார் அளித்தார்.
இதனை அடுத்து மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அப்போ ராஜாவின் திருமணம் நடைபெறவில்லை. கோவிலுக்கு எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்தில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த விவகாரத்தால் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் படி இந்து மதத்தை சாராத ஒருவர் இந்து கோவில்களில் பணி அமர்த்த முடியாது இந்த நிலையில் கிருத்துவரான அப்பு ராஜா எவ்வாறு இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பணி அமர்த்தபட்டார் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இணையான காவேரி கூறுகையில் “திருமணத்தை கோவில் நடத்த விரும்ப அவர்கள் அதற்கான விண்ணப்பத்தை கோயில் நிர்வாகத்திடம் அளித்து ஒப்புதல் பெறுபவர். அந்த வகையில் கோயில் ஊழியர் அப்பு ராஜா தன் திருமண கோவிலில் நடக்க அனுமதிக்குமாறு கேட்டபோது மறுக்க முடியவில்லை. அவர் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்பது புகார் வந்த பின்புதான் எங்களுக்கு தெரிய வரும். இதனை அடுத்து அப்பு ராஜாவை அழைத்து திருமணத்தை கோவில் நடத்த தடை விதித்து விட்டோம். கோவில் ஐதீகம், ஆகமம், சம்பிரதாயம் எதுவுமே இந்த விஷயத்தில் மீறப்படவில்லை” என தெரிவித்தார்.