`நாங்க, 20 வருஷத்துக்கு முன் பிரிக்கப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்’-நெகிழும் சகோதரிகள்!

2002-ம் ஆண்டு, ஒட்டிப்பிறந்த 6 மாத இரட்டை குழந்தைகளை, பாதுகாப்பான அறுவை சிகிச்சை மூலம் `பிரித்து’ அவர்களுக்கு புது வாழ்வு அளித்திருந்தனர், கொல்கத்தாவை சேர்ந்த மருத்துவர்கள் குழு. மோனா-லிசா என பெயரிடப்பட்ட இந்த இரட்டையர்கள், இப்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாக்களும்கூட!
மோனாவும் லிசாவும், தங்களின் சுவாரஸ்யமான வாழ்வை, கதை போல சமீபத்தில் ஒரு இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ளனர். அதுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
image
இந்த இரட்டையர் அம்மாக்களான மோனா-லிசாவுக்கு, கடந்த மாதம்தான் 20 வயதாகியிருந்தது. கடந்த நவம்பர் 1, 2002-ல், பச்சிளம் குழந்தைகளாக இருந்த இவர்களுக்கு, அப்போதே 30 மருத்துவர்கள் தலைமையிலான குழு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளது. அன்றைய தேதியில் மேற்கு வங்கத்தில் நடந்த முதல் `ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை பாதுகாப்பாக பிரித்தெடுப்பதற்கான’ வெற்றிகரமான அறுவை சிகிச்சை அதுதான்.
மோனா-லிசாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் குழு சார்பில் மரு.நரேந்திரநாத் முகர்ஜி தெரிவிக்கையில், “குழந்தைகள் இருவருக்கும் வெவ்வேறு நுரையீரல் மற்றும் இதயம் இருந்தாலும்கூட, சில உள்ளுறுப்புகள் ஒன்றாகவே இருந்தன. அதனால் அறுவை சிகிச்சையில் சவால்கள் நிறைந்திருந்தன. சுமார் 8 மணி நேரத்துக்கு அந்த அறுவை சிகிச்சை நடந்தது” என்றுள்ளார்.
image
தாங்கள் இருவரும் இரட்டையர்கள் என்பதை வெகுகாலம் கழித்தே இவர்கள் உணர்ந்திருக்கின்றனர். தங்கள் அம்மாதான் தங்களுக்கு அதை தெரிவித்ததாகவும், அவர்கள் கூறியுள்ளனர். தங்களின் இந்த ஒட்டிப்பிறந்து பிரிந்த வரலாற்றை, திருமணத்துக்கு முன்பே இருவரும் கணவர் வீட்டாரிடம் தெரிவித்து விட்டதாகவும், அவர்களும் எந்தவித தயக்கமுமின்றி தன்னை ஏற்றுக்கொண்டதாகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர் மோனாவும் லிசாவும்.
தற்போது மோனாவுக்கு 15 மாத பெண் குழந்தையும், லிசாவுக்கு 12 மாத பெண் குழந்தையும் உள்ளனர். மோனா-லிசா இருவருக்குமே, பிரிந்த பின்னர் சில காலத்துக்கு உடல் உபாதை ஏற்பட்டதாகவும், அதிலிருந்தும் மருத்துவ உதவியால் தாங்கள் விடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒட்டிப்பிறந்த இந்த இரட்டையர்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.