ஹூங்கமுவ பாடசாலை சம்பவம்:அதிபர் ,இரண்டு பொலிஸார் விளக்கமறியலில்

பண்டாரகம ஹூங்கமுவ கனிஷ்ட பாடசாலையின் மாணவர்கள் சிலரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில், பாடசாலையின் தலைமையாசிரியை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று (08) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நவம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், தரம் 05 மாணவர்கள் சிலர் ஆசிரியையின் பணப்பையை திருடியதாகக் கூறி மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாக தாக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த பாடசாலையின் ஆசிரியை மற்றும் மில்லனிய பொலிஸ் பிரிவின் சாரதி ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.