பிரித்தானியாவில் 1.5 சதவிகிதம் இந்தியர்கள் வசிக்கின்றனர்.
பிரித்தானியா மற்றும் வேல்ஸில் வசிக்கும் 6ல் 1 நபர் வெளிநாட்டவர்.
பிரித்தானியா மற்றும் வேல்ஸில் வசிக்கும் பிரித்தானியர் அல்லாத வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்று பிரித்தானியாவின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியா மற்றும் வேல்ஸில் வசிக்கும் பிரித்தானியர்கள் அல்லாத வெளிநாட்டினரின் எண்ணிக்கையை அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
NDTV
அதனடிப்படையில் பிரித்தானியா மற்றும் வேல்ஸில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும், அதை தொடர்ந்து போலந்து மற்றும் பாகிஸ்தான் மக்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டின் மக்கள் தொகையில், வெளிநாட்டில் பிறந்து பிரித்தானியாவில் வசிக்கும் மொத்த இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 9,20,000 பேர், போலந்து மக்கள் 7,43,000 பேர், பாகிஸ்தான் மக்கள் 6,24,000 பேர் என தெரியவந்துள்ளது.
இந்த எண்ணிக்கையின் மூலம் பிரித்தானியாவில் இந்தியர்கள் 1.5 சதவிகிதமும், போலந்து மக்கள் 1.2 சதவிகிதமும், பாகிஸ்தான் மக்கள் 1 சதவிகிதமும் குடியிருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
SOURCE: Census 2021/SKY NEWS
அத்துடன் கடந்த ஆண்டு பிரித்தானியா மற்றும் வேல்ஸில் வசிக்கும் ஆறு பேரில் ஒருவர்( 6 in 1) பிரித்தானியாவிற்கு வெளியே பிறந்த வெளிநாட்டினர் என்றும், முந்தைய 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை கொண்டு பார்த்தால் இந்த விகிதம் 2.5 மில்லியன் அதிகரித்துள்ளது.
சுமார் 13.4 விகிதாசாரத்துடன் 7.5 மில்லியன் வெளிநாட்டினர் இருந்த நிலையில், தற்போது இந்த விகிதாசாரம் 16.8 சதவிகிதமாக அதிகரித்து 10 மில்லியன் வெளிநாட்டினர் என்ற எண்ணிக்கையில் இருப்பதாக தேசிய புள்ளியியல் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
கூடுதல் செய்திகளுக்கு: கல்லூரியில் டிராப் அவுட்…அவுஸ்திரேலியாவில் வென்று காட்டிய இந்திய இளம் தொழிலதிபர்!
SKY NEWS
பிரித்தானியாவில் வசிக்கும் வெளிநாட்டினரில் முதன்மை மூன்று இடங்கள் மாறாமல் உள்ளன, 10 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியா, போலந்து பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளே முதல் மூன்று இடங்களை பிடித்து இருந்தன.
2011ன் படி, இந்தியர்கள் 6,94,000, போலந்தினர் 5,79,00, பாகிஸ்தானியர்கள் 4,82,000 பிரித்தானியாவில் குடியிருந்தனர்.