இ.போ.ச பஸ்களின் பயண செயற்பாடுகளை கண்காணிக்க புதிய செயலி (App)

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் பயணத்தை ஆரம்பித்தது முதல் பயணம் முடியும் வரை உள்ள ஒவ்வொரு தரிப்படங்களுக்கும் இடையில் பயணிக்கும் நேரம் மற்றும் தூரத்தை கணிக்க டிஜிட்டல் வரைபடத்துடன் கூடிய செயலி (App) ஒன்றை பொறுத்துவதற்கு நில அளவைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த செயலிகள் (Apps) இலங்கை போக்குவரத்து சபையினால் இணைந்து தயாரிக்கப்படும் என்பதுடன், நில அளவைத் திணைக்களத்தினால் எண்ணக்கரு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் நில அளவையாளர் ஏ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த வரைபடத் திட்டம் கொழும்பு மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் நில அளவையாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் பஸ்கள் பயணிக்கும்; பாதைகள் மற்றும் பயணத்தின் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு பஸ் தரிப்பிடத்திற்கும் எடுக்கும் நேரம் ஆகியவற்றை இலங்கை போக்குவரத்து சபை இந்த வரைபடத்தில் உள்ளடக்கும். மேலும் வாகன நெரிசல் அதிகமான மற்றும் குறைவான சந்தர்ப்பங்களில், அந்நதந்த பஸ் தரிப்பிடங்கள் வரை பயணிக்கும் நேரம் இந்த 3D வரைபடத்தினூடாக எடுத்துக் காட்டும் என்றும் நில அளவையாளர் குறிப்பிட்டுள்ளார். வரைபடங்களுடன் கூடிய இந்த செயலி விரைவில் நாடு பூராகவும் உள்ள இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் பயணிக்கும் அனைத்து வீதி அமைப்புகளையும் உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.