சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு மிதமான மழை (மஞ்சள் எச்சரிக்கை) பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
நாளை 10.11.2022 | திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு (மஞ்சள் எச்சரிக்கை) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
11/11/2022 அன்றைய தினம் | திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமேஸ்வரம், விருதுநகர் மற்றும் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளுக்கு கன மழை பெய்வதற்கு உண்டான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
12/11/2022 அன்றைய தினம் | விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களை தவிர தமிழகத்தின் எல்லாம் மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி மற்றும் காரைக்கால், புதுச்சேரிகளில் கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது