ரி20 உலகக்கிண்ணத்தின் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிட்னியில் இன்று (09) பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரி20 உலகக்கிண்ணத்தின் சூப்பர்12 சுற்றின் முடிவில் குழு 1 இல் முதல் இரு இடங்களை பிடித்த நியூசிலாந்து (7 புள்ளி), இங்கிலாந்து (7 புள்ளி), குழு 2 இல் முதல் இரு இடங்களை பெற்ற இந்தியா (8 புள்ளி), பாகிஸ்தான் (6 புள்ளி) ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
குழு 1 இல் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகள் பெற்ற போதிலும் ஓட்ட எண்ணிக்கையில் பின்தங்கியதால் வெளியேற நேரிட்டது.
இந்நிலையில் சிட்னியில் இன்று (09) 1.30 மணிக்கு ஆரம்பமான முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் விளையாடுகிறது.
இதுவரை பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் 20 ஓவர் கிரிக்கெட்டில் 28 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11 இல் நியூசிலாந்தும், 17 இல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.
இதேவேளை நாளை (10) இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான அரையிறுதி போட்டி நடைபெறவுள்ளது.