குஜராத்தில், ‘வந்தே பாரத்’ விரைவு ரயில் மோதியதில், ௫௪ வயது பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயிலை, பிரதமர் மோடி செப்டம்பர் மாதம் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த ரயில், குஜராத் மாநிலம் காந்தி நகர் ரயில் நிலையம் முதல், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை இயக்கப்படுகிறது. இது, நேற்று மாலை குஜராத்தில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், ஆமதாபாதைச் சேர்ந்த பியாத்ரிஸ் ஆர்ச்சிபால்டு பீட்டர் என்ற பெண், ஆனந்த் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது, ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து, ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement