அரச குடும்ப பெண்ணின் பாதத்தை தொட்டு சர்ச்சையில் சிக்கிய ரிஷி சுனக் மாமியார்!



மைசூர் அரச குடும்பத்தை சேர்ந்த ப்ரோமதா தேவி பாதத்தில் விழுந்து சர்ச்சையில் சிக்கிய சுதா மூர்த்தி.

மீண்டும் வலதுசாரி அமைப்பின் தலைவர் சம்பாஜி பிடேவின் காலில் விழுந்ததால் எழுந்த விமர்சனம்.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மாமியார் சுதா மூர்த்தி வலதுசாரி அமைப்பின் தலைவர் சம்பாஜி பிடேவின் காலில் விழுந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி. இவர்களது மகளை தான் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மணந்துள்ளார். எழுத்தாளரான சுதா மூர்த்தி மராட்டிய மாநிலம் சாங்கிலியில் தனது வாசகர்களை சந்தித்து பேசும் நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை நடந்தது.

இந்த நிகழ்வின் போது திடீரென அங்கு வலதுசாரி அமைப்பான சிவபிரதிஷ்தான் தலைவர் சம்பாஜி பிடே வந்தார். இதில், சுதா மூர்த்தி அவரது காலில் விழுந்து ஆசி பெற்ற வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

சம்பாஜி பிடே சமீபத்தில் அவரை பேட்டி எடுக்க சென்ற பெண் பத்திரிகையாளரை, நெற்றியில் எதுவுமின்றி விதவை போல வராமல் பொட்டு வைத்துவிட்டு தன்னிடம் பேச வருமாறு கூறியிருந்தார். இதுதொடர்பாக மாநில பெண்கள் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 


இந்தநிலையில் சம்பாஜி பிடேவின் காலில் விழுந்து சுதா மூர்த்தி ஆசி பெற்றது விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

இதனிடையில் சுதா மூர்த்திக்கு, சம்பாஜி பிடே யார் என தெரியாது, வயதை கருத்தில் கொண்டு காலில் விழுந்து ஆசி பெற்றதாக அவரது உதவியாளர் யோஜனா யாதவ் கூறியுள்ளார்.

மேலும் சம்பாஜி பிடே ஆதரவாளர்கள் அழைப்பு இல்லாமல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்தனர். வெளியில் அதிகளவில் சம்பாஜி பிடே ஆதரவாளர்கள் திரண்டதால், சம்பாஜி பிடேவை சந்திக்குமாறு சுதா மூர்த்தியை உள்ளூர் பொலிசார் கேட்டுக்கொண்டனர். எனவே சுதா மூர்த்தி, சம்பாஜி பிடேயை சந்தித்தார் என கூறினார்.

இந்த ஆண்டு செப்டம்பரில், மைசூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ப்ரோமதா தேவி வாடியாரின் பாதங்களைத் தொட்டு சுதா மூர்த்தி இதேபோன்ற சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.