சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின்கட்டணம் 10% குறைப்பு! தமிழகஅரசு

சென்னை: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மின்கட்டணம் 10% குறைத்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறைந்த மின் இணைப்பு கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபச்ச பயன்பாட்டு கட்டணம் 25%-லிருந்து 15%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2022-2023 ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.09.2022 முதல் மின்கட்டண ஆணை எண்.7/22, நாள் 09.09.2022-ன் படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கட்டணத்தின்படி குறு, தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார தொழில் நிறுவனங்கள் சிறு (ம) நடுத்தரத் தொழில் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளதால், ஒருநாளின் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை (Peak Hour Charges) குறைக்கும்படி பல்வேறு குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையினை ஏற்று குறைந்தழுத்த மின் இணைப்பு (Low Ten:sion II-B) கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைக்கலாம் என முடிவு செய்து உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

இவ்வாறு மின்கட்டணத்தை குறைப்பதால் தமிழ்நாட்டில் உள்ள குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.