அங்கீகாரம் ரத்து செய்யப்படும்: தனியார் கல்லூரிகளுக்கு அரசு எச்சரிக்கை..!

அரசு அறிவித்ததை விட அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எழுதிய கடிதத்தில், ‘தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு கல்விக் கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஆனால், பல கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மேலும், கட்டண நிர்ணய குழு அறிவித்த கட்டணத்துக்கு அதிகமாக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் வசூல் செய்தால் மாணவர்கள் புகார் அளிக்கலாம். அதன் அடிப்படையில், அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அனைத்து சுயநிதி நிறுவனங்களும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.