போருக்குத் தயாராக இருங்கள்; ராணுவத்துக்கு சீன அதிபர் உத்தரவு!| Dinamalar

பீஜிங்: ராணுவம் தனது பயிற்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும், எத்தகைய போரையும் நாம் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் சீன அதிபர் ஷீ ஜிங்பிங் உத்தரவிட்டுள்ளார்.

தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு தைவான். தைவான் நாடு தம்மை உண்மையான சீனா என்கிறது. ஆனால் சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்கிறது. சர்வதேச விவகாரங்களில் 1970களில் கூட தைவான் தான் உண்மையான சீனா என அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு பிந்தைய சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் மாறின. சீனாவைப் பொறுத்தவரை ஒற்றை சீனா என்கிற கோட்பாட்டை முன்வைக்கிறது.

இதில் தைவானும் தங்களது நாட்டின் ஒரு அங்கம் என்பது சீனாவின் நிலைப்பாடு. ஆனால் உலக நாடுகள் இதனை ஏற்க மறுத்து வருகின்றன. இதனால் தைவானை முன்வைத்து சர்வதேச அரசியலில் குழப்பம் நிலவுகிறது.தைவானுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தைவானை ஆக்கிரமிக்க சீனா முயலுமானால், அந்நாட்டிற்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்கும் என அது அறிவித்துள்ளது.

latest tamil news

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகைக்குப் பிறகு சீனா – தைவான் உறவு மேலும் பிரச்சனையை உருவாக்கியுள்ளது. தைவானை தங்களுக்கு எதிராக திருப்பி அதன்மூலம் அச்சுறுத்தல் விடுக்கும் போக்கிற்கு முடிவு கட்ட சீன அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சீன அதிபராக சீன அதிபர் ஷீ ஜிங்பிங் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

latest tamil news

இந்நிலையில், சீனாவின் தலை நகர் பீஜிங்கில் உள்ள கூட்டு ராணுவ தலைமையகம் அமைந்துள்ள மத்திய ராணுவ ஆணையகத்தில் சீன அதிபர் ஷீ ஜிங்பிங் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, அவர் ராணுவம் தனது பயிற்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும், எத்தகைய போரையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், அவர் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை உறுதிப்படுத்தவும் சீன ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என கூறினார் என சீன ஊடகங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.