சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை கடன் பெறுவதற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு விரைவாக ஆதரவு வழங்கப்படும் என அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சான், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விவசாய திணக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கால்நடை வள அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண கால்நடை துறையில் ஈடுபட்டவர்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கப்படும் என்று தூதுவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி.ஜூலி சுங் ((Ms.Julie Chung) ) நேற்று முன்தினம் (08) திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத்தை சந்தித்து, விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே இந்த வியங்களை குறிப்பிட்டார். மட்டக்களப்பில் உள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திருமதி அனுராதா யாஹம்பத்தை சந்தித்தார்.
நாட்டின் அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்ட பின்னர் ,தூதுவர் கிழக்கு மாகாணத்திற்கு மேற்கொண்ட விஜயம் இதுவாகும்.
கிழக்கு மாகாணம் விவசாயத்தை பிரதானமாக கொண்டுள்ளதனால் விவசாயத்தினூடாக மாகாணத்தை தன்னிறைவுடைய மாகாணமாக மேம்படுத்த முடியும் என்றும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
Sayanthiny Kanthasamy/AKM