சுமார் 100,000 ரஷ்ய வீரர்கள்… இராணுவ வெற்றி சாத்தியமில்லை: அமெரிக்கா அறிவுரை


100,000 ரஷ்ய வீரர்கள் உக்ரைன் போரில் கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது படுகாயமடைந்து இருக்கலாம் என புதன்கிழமை அமெரிக்காவின் உயர்நிலை ஜெனரல் மார்க் மில்லி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய வீரர்கள் இழப்பு

 அமெரிக்காவின் நியூயார்க் நகரின் எகனாமிக் கிளப்பில் பேசிய நாட்டின் உயர்நிலை ஜெனரல் மார்க் மில்லி(Mark Milley), உக்ரைன் போரில் 100,000 ரஷ்ய வீரர்கள் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது படுகாயமடைந்து இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதே அளவிலான இழப்பை உக்ரைனும் சந்தித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

சுமார் 100,000 ரஷ்ய வீரர்கள்… இராணுவ வெற்றி சாத்தியமில்லை: அமெரிக்கா அறிவுரை | Russian Soldiers Killed In Ukraine Top Us GeneralAFP via Getty Images

ஜெனரல் மார்க் மில்லி வழங்கிய இந்த புள்ளிவிவரங்கள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட முடியவில்லை.

பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கான நேரம்

இராணுவ வெற்றி என்பது ரஷ்யாவுக்கும் அல்லது உக்ரைனுக்கும் சாத்தியமற்றதாக இருக்கலாம், எனவே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான வாய்ப்பு இது என மார்க் மில்லி தெரிவித்துள்ளார். 

இராணுவ வெற்றி என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தங்கள் இராணுவ வழிமுறைகளால் அடைய முடியாமல் போகலாம், எனவே இருநாடுகளும் போரை நிறுத்துவதற்கு வேறு வழிகளுக்கு திரும்ப வேண்டும் என குறிப்பிட்டார்.

சுமார் 100,000 ரஷ்ய வீரர்கள்… இராணுவ வெற்றி சாத்தியமில்லை: அமெரிக்கா அறிவுரை | Russian Soldiers Killed In Ukraine Top Us General

அமெரிக்க ராணுவ ஜெனரலின் இந்த கருத்து, ரஷ்ய படைகள் போர் எதுவும் இல்லாமல் முக்கிய மூலோபாய நகரான கெர்சனை கைவிடுவதாக அறிவித்ததை தொடர்ந்து வெளிவந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.