புதுடெல்லி
20 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 153 என்ற இலக்கை துரத்தியதில் அவர்கள் 7 விக்கெட்டுகள் மற்றும் 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றனர். பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தனர்.
இந்த் போட்டியில் பெரிதும் வைரலானது பாகிஸ்தான் ரசிகை ஒருவர்.பாகிஸ்தான் ரசிகையின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இரண்டாவது அரையிறுதியில், நவம்பர் 10, வியாழன் அன்று அடிலெய்டில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
போட்டிக்குப் பிறகு, பாகிஸ்தான் ரசிகை நடாஷா, நவம்பர் 13 அன்று மெல்போர்னில் இந்தியா – பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு வாழ்த்து தெரிவித்தார். பாபர் அசாம் தலைமையிலான அணி ரோகித் சர்மா தலைமையிலான அணியை வெற்றி பெறும் என கூறினார்.
“நம்பிக்கையுடன், இந்தியா இறுதிப் போட்டிக்கு வரும். நாம் அவர்களை வீழ்த்த வேண்டும். பாகிஸ்தான் உலகக் கோப்பைக்கு செல்கிறது,” என்று நடாஷா கூறி உள்ளார்.
பாகிஸ்தான் அணியுடன் இறுதிப்போட்டியில் இந்தியாவே விளையாட வேண்டும் என்பது கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனையே முன்னாள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்களும் எதிர்நோக்கி உள்ளனர். அதுமட்டுமன்றி பாகிஸ்தான் வீரர்களும் இந்தியாவுடனே மோத விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர் கொள்ள விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார். நியூசிலாந்துடனான வெற்றிக்கு பிறகு இறுதி போட்டியில் எந்த அணியை சந்திக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் இந்த பதிலை அளித்தார். இதே போல பாகிஸ்தான் தொடக்க வீரர் ரிஸ்வானும் இந்தியாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தான் அணியின் ஆலோசகரான மாத்யூ ஹைடன் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சளரான சோயப் அக்தரும் இந்தியவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டியில் விளையாட விரும்புவதாக தெரிவித்து உள்ளனர். எனவே பலரது எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா தனது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது.