கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் 43 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நிறைவடைந்தது. இந்த சோதனையில் டிஜிட்டல் கருவிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபின் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரும், உயிரிழந்த ஜமேஷா முபினுடன் சேர்ந்து ஆன்லைனில் வெடிமருந்துகள் வைங்கியதாக என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை கார் வெடிப்பு தொடர்பாக இந்த தமிழகம் முழுவதும் 8 மாவட்டங்களில் 43 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தினர். தற்போது இந்த சோதனையானது முடிவடைந்த நிலையில், ஏராளமான டிஜிட்டல் ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின் மிக பெரிய அளவில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் அதன் விளைவாக மிகப்பெரிய உயிர் மற்றும் பொருட் சேதத்தை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியுள்ளனர்.