மும்பை,
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதன் அடிப்படையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் எண்ணத்தில் மத்திய அரசு உள்ளது. இது குறித்து நேற்று புனே வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவர் பதிலளித்து கூறியதாவது:-
நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விவகாரம் தேர்தல் ஆணையத்தின் அதிகார எல்லைக்குள் வராது. இது தொடர்பாக நாடாளுமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் முடிவு எடுத்தால் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதை எங்களால் கையாள முடியும்.ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது நிச்சயமாக நிறைய இடையூறுகளை உள்ளடக்கியது தான்” இவ்வாறு அவர் கூறினார்.