புதுடெல்லி: காற்று மாசுபாட்டைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தலைநகர் டெல்லி அதனை சுற்றியுள்ள என்சிஆர் பகுதிகளில் காற்று மாசுபாட்டைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
டெல்லியில் மோசமடைந்து வரும் காற்று மாசுபாடு குறித்த மனுவை கடந்த 4-ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நவம்பர் 10-ம் தேதி நடைபெறும் என்று முன்னாள் தலைமை நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
டெல்லி காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்தது. பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வைக்கோல் உள்ளிட்ட விவசாய கழிவு பொருட்கள் வெட்டவெளியில் பன்மடங்கு எரிக்கப்படுவதால் அண்டை பகுதியான டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.