உக்ரைன் ரிட்டன் மருத்துவ மாணவர்கள் ரஷியாவில் கல்வியை தொடரலாம்! ரஷ்ய தூதர் அசத்தல் அறிவிப்பு…

சென்னை: உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்தியாவைச் சேர்ந்த  மருத்துவ மாணவர்கள் ரஷியாவில் கல்வியை தொடரலாம் என சென்னையில் உள்ள ரஷ்ய  தூதரக ஜெனரல் ஓலெக் அவ்தீவ் அறிவித்து உள்ளார். இது உக்ரைன் ரிட்டன் மருத்துவ மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்ததால், அங்கு மருத்துவம் உள்பட பல கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி படித்து வந்த மாணவர்கள் தாயகம் திரும்பினர். இந்தியாவைச் சேர்ந்த சுமார் 20ஆயிரம் மருத்துவ மாணவர்கள் உக்ரைனில் இருந்து நாடு திரும்பியதாக கூறப்படுகிறது. இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக் கும் மேற்பட்ட மாணாக்கர்களும் அடங்கும்.

இவர்கள் தங்களது கல்வியை இந்தியாவில் தொடர அனுமதி கோரியிருந்தனர். ஆனால், அதற்கு மத்தியஅரசு அனுமதி வழங்க மறுத்து விட்டது. மேலும், உக்ரைனின் அண்டை மாநிலங்களில் அவர்கள் கல்வி தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார். மேலும், இது தொடர் பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர்களுக்கு இந்தியாவின் நட்பு நாடான ரஷ்யா கைகொடுத்துள்ளது. உக்ரைன் ரிட்டன் இந்திய மருத்துவ மாணவர்கள் ரஷியாவில் தங்களது மருத்துவ கல்வியை தொடர அனுமதி வழங்கப்படுவதாக சென்னையில் உள்ள ரஷ்ய தூதர் ஓலெக் அவ்தீவ் தெரிவித்து உள்ளார்.

மேலும், ரஷ்யாவின் மருத்துவப் பாடத்திட்டம் உக்ரைனைப் போலவே இருப்பதால், உக்ரைனை விட்டு வெளியேறிய இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் தங்கள் கல்வியைத் தொடரலாம். உக்ரைனைப் போலவே, அவர்களில் பெரும்பாலோர் ரஷ்ய மொழி பேசுவதைப் போலவே, மக்களின் மொழியும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் ரஷ்யாவில்  வரவேற்கப்படுகிறார்கள் என்று கன்சல் ஜெனரல் ஓலெக் அவ்தீவ் கூறியுள்ளார்.

உக்ரைன் ரிட்டன் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர அனுமதியில்லை! மத்தியஅரசு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.