வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பாலியல் புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியும், அந்தமான் நிகோபார் தலைமை செயலாளருமான ஜிதேந்திரா நாராயணன் கைது செய்யப்பட்டார்.
அந்தமான் நிகோபார் அரசின் தலைமை செயலராக இருந்தவர் ஜிதேந்திரா நாராயண், இவர் மீது கடந்த ஜூலை மாதம் 21 வயது இளம் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தன்னை ஜிதேந்திரா நாராயண், தொழிலாளர் கமிஷனர் ஆகிய இருவரும் சேர்ந்த கூட்டு பலாத்காரம் செய்ததாக அந்த புகாரில் கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அதன் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து ஜிதேந்திரா நாராயண் கடந்த ஆகஸ்ட் மாதம் இடமாற்றம் செய்யப்பட்டு டில்லியில் பணிக்கு அழைக்கப்பட்டார். கடந்த அக்டேபரில் அவரை சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இது குறித்து சிறப்பு விசாரணை குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது கூட்டு பலாத்காரம் செய்தல், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement