டில்லி மதுபான கொள்கை விவகாரம்: இரண்டு பேர் கைது| Dinamalar

புதுடில்லி: டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இரண்டு பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
டில்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும், டில்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த ஆரோபிந்தோ பார்மா நிறுவனத்தின் இயக்குநர் சரத் ரெட்டி மற்றும் பெர்னோட் ரிச்சர்ட் நிறுவனத்தின் பீனோய் பாபு ஆகியோரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி, அவர்களிடம் விசாரணை நடத்தியிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.