புதுடெல்லி: குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் 3வது பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. குஜராத் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 1, 5ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் 43 பேர் அடங்கிய காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் 2வது பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டது. இதில், 46 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து, 7 வேட்பாளர்கள் அடங்கிய 3வது பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. இத்தேர்தலில் காங்கிரசுடன், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு உம்ரேத், நரோடா மற்றும் தேவ்கத் பரியா தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.