போலி மரணத்தை உருவாக்கி ஸ்கொட்லாந்துக்கு தப்பிய அமெரிக்கர்.. நாடுகடத்தலை எதிர்கொள்ளும் துஷ்பிரயோக குற்றவாளி

கடந்த 11 மாதங்களாக 35 வயதாகும் ரோஸி, ஸ்கொட்லாந்து நீதிமன்றங்களை ஏமாற்ற முயன்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது

ரோஸி என அறியப்படும் இவர் நிக்கோலஸ் அல்ஹ்வெர்டியன், ஆர்தர் நைட் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறார் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்  

அமெரிக்காவைச் சேர்ந்த தேடப்படும் பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஸ்கொட்லாந்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட உள்ளார்.

அமெரிக்காவின் Salt Lake City பகுதியில் பெண்ணொருவரை நிக்கோலஸ் ரோஸி என்ற நபர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதே போல் வேறொரு இடத்தில் மற்றோரு பெண்ணையும் அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

அதன் பின்னர், சிறை செல்வதை தவிர்க்க தான் மரணமடைந்து விட்டதாக நம்ப வைத்து விட்டு ஸ்கொட்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவிட்-19 குறித்து தன்னை பரிசோதிக்க கிளாஸ்கோ நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றபோது ரோஸி முதலில் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் தான் அவர் போலி மரணத்தை உருவாக்கி அமெரிக்காவில் இருந்து தப்பி வந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

போலி மரணத்தை உருவாக்கி ஸ்கொட்லாந்துக்கு தப்பிய அமெரிக்கர்.. நாடுகடத்தலை எதிர்கொள்ளும் துஷ்பிரயோக குற்றவாளி | Us Man Deportation From Scotland Who Charges Rape

அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் இன்டெர்போலின் ரெட் நோட்டிஸின் படி, அவரது புகைபடங்கள் மற்றும் டாட்டூக்களின் ஒப்பீடு மூலம் பொலிஸார், மருத்துவ ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டார்.

போலி மரணத்தை உருவாக்கி ஸ்கொட்லாந்துக்கு தப்பிய அமெரிக்கர்.. நாடுகடத்தலை எதிர்கொள்ளும் துஷ்பிரயோக குற்றவாளி | Us Man Deportation From Scotland Who Charges Rape

அயர்லாந்தைச் சேர்ந்த ஆர்தர் நைட் என்ற பெயரில் ஸ்கொட்லாந்தில் உலா வந்த அவர், நீண்ட விசாரணைக்கு பின்னர் தக்க ஆதாரங்களுடன் உண்மையில் நிக்கோலஸ் ரோஸி தான் என்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனால் அவர் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவதை எதிர்கொள்வதாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டது.

போலி மரணத்தை உருவாக்கி ஸ்கொட்லாந்துக்கு தப்பிய அமெரிக்கர்.. நாடுகடத்தலை எதிர்கொள்ளும் துஷ்பிரயோக குற்றவாளி | Us Man Deportation From Scotland Who Charges Rape

PA

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.