சென்னை வழக்கு விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைவாக இருந்த ரவுடி ஆர்.டி.ஆர். பாலாஜியை தனிப்படை போலீஸ் கைது செய்தனர். தென்சென்னையைச் சேர்ந்த பிரபல தாதா மயிலாப்பூர் சிவக்குமார் என்பவரை கடந்த 2021-ல் வெட்டிக் கொலை செய்தனர். சிவக்குமார் கொலை வழக்கில் ரவுடி சென்னை ஆர்.டி.ஆர்.பாலாஜியைச் சேர்ந்து 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.