கொலம்பியாவின் பெண் போலீசார் ஒருவர், அங்கு நடக்கும் குற்றச்செயல்களை தட்டிக்கேட்டு ஒரு பகுதி முழுவதையும் தன் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கும் அதே வேளையில், சமூக வலைதளத்தில் ஏறத்தாழ நான்கு லட்சம் பேரையும் கட்டியாண்டு வருகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.
கொலம்பியா நாட்டின் தலைநகரான மெடலினில், பெண் காவலராக பணியாற்றி வரும் டயானா ராமிரெஸ் என்பவர்தான் இந்த அத்தனை பெருமைக்கும் உரியவர். அவரை சமூக இணையத்தில் பின்தொடரும் அத்தனை பேரும், டயானாவைதான் ‘உலகின் மிக அழகான போலீஸ்’ என்று புகழ்பாடி வருகின்றனர்.
‘அவள் உலக அழகியே…’
உலகத்தின் மிக அபயாகரமான பகுதிகளாக கருதப்படும் கொலம்பிய தலைநகர் மெடலினின் வீதிகளை கண்காணிக்கும் பொறுப்பில் டயானா உள்ளார். போதைப்பொருள் தொடங்கி அத்தனை சட்டவிரோத செயல்களும் அந்த பகுதியில் கட்டுக்கடங்காமல் நடைபெறும் என கூறப்படும் நிலையில், அவற்றை தடுக்க கடுமையான கண்காணிப்பில் ஈடுப்பட்டும் மிக முக்கிய பொறுப்பில் டயானா இருந்து வருகிறார்.
மேலும் படிக்க | சார்லஸ் மன்னரின் மீது வீசப்பட்ட முட்டை; வீசியவருக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா!
ஆனால், அவரின் சமூக வலைதள பக்கங்களை நீங்கள் கொஞ்சம் எட்டிப்பார்த்தால் மேற்கூறியவை குறித்த ஒரு அறிகுறி கூட தெரியாது. போட்டோ, வீடியோ என செம கேஷ்சுவலாக இணையத்தில் அவர் செயல்பட்டு வருகிறார். இதனால், அவருக்கும், அவரின் அழகிய தோற்றத்திற்கும் ஊரே அடிமையானது மட்டுமின்றி இணையத்திலும் இளசுகள் அவரை அவரை சுற்றி வருகின்றனர்.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
ஆனால், இந்த அத்தனைக்கு டயானா கொடுக்கும் ஒரே பதில்,”என்னை இப்படி ஒரு பொறுப்பில் அமர்த்திய தேசிய காவல்துறைக்கு என்னை நானே ஒப்புக்கொடுத்துவிட்டேன். அதனால், இந்த பணியை விட்டுவிட்டு மாடலாகும் எண்ணமோ அல்லது ஆன்லைன் செயற்பாட்டாளராகும் எண்ணமோ என்னிடம் துளியும் இல்லை” என துணிவுடன் பதிலளித்துள்ளார்.
மேலும்,”இந்த வாழ்க்கை எனக்கு வேறு தொழிலை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை மீண்டும் கொடுத்தாலும், நான் அப்போதும் காவல்துறையையே தேர்வுசெய்வேன். எனக்கு அதில் எந்த தயக்கமும் இல்லை. மீண்டும் காவலராகதான் ஆவேன். ஏனென்றால், இந்த அமைப்புக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன். நான் இப்போது எப்படி இருக்கிறேனோ, அதுதான் நான்” என அதிரடி தெரிவித்துள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராமில் கொள்ளையர்களின் மனதை கொள்ளையடிக்கும் பல்வேறு புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, இந்தாண்டின் இன்ஸ்டாஃபெஸ்ட் விருதுகளில் (Instafest Awards) சிறந்த போலீஸ் அல்லது ராணுவ செயற்பாட்டாளர்கள் விருதுக்கு டயானா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த விருது, சிறந்த இணைய செயல்பாடுகள் மூலம் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் போலீஸ் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் விருது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஆடையின்றி படுத்திருந்த உயர் அதிகாரி… படுக்கையில் அலறிய பெண் – கடைசியில் ட்விஸ்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ