நடிகை அஞ்சலி தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா ஆகிய படங்களில் நடித்து இவர் பிரபலமானார். அதேபோல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடுவில் நடிகர் ஜெய்யுடன் காதல் வதந்தியிலும் அஞ்சலி சிக்கினார்.
15 ஆண்டுகளாக சினிமாவில் தாக்குப்பிடித்து நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை அஞ்சலி, நடுவில் அஞ்சலியின் உடல் எடை கூடியதால் அவருக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின. பின்னர் சின்ன கேப் எடுத்துக் கொண்டவர் கடுமையாக உடற்பயிற்சி செய்து மீண்டும் களத்தில் குதித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் தெலுங்கு படத்தில் இவர் போட்ட குத்தாட்டம் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனது. தற்போது இவர் ஜான்சி என்கிற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது.
இந்த நிலையில் தற்போது நடிகை அஞ்சலி சொத்து மதிப்பு குறித்த விவரம் பிரபல தெலுங்கு இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளது. அதில் 15 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் அஞ்சலியின் சொத்து மதிப்பு ரூ. 10 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் 50 லட்சம் முதல் 80 லட்சம் வரை சம்பளம் வாங்கிய அஞ்சலியின் சொத்துமதிப்பு வெறும் ரூ. 10 கோடி தானா என ஆச்சரியத்தில் கேட்டு வருகின்றனர்.