68 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது.
ஹிமாச்சல் பிரதேசத்தில் சட்டமன்றம் வரும் ஜனவரி மாதத்துடன் காலாவதியாக உள்ள நிலையில் 68 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 55,74,793 வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற உள்ள நிலையில் 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
தேர்தலை அடுத்து மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 7,881 வாக்கு சாவடிகளில் 789 பதற்றமானவை என்றும், 397 அதிக பதற்றமானவை என்றும் கணக்கிடப்பட்டு 67 கம்பெனியை சேர்த்த துணை ராணுவ படையினர், 11,500க்கும் மேற்பட்ட மாநில காவல் துறையினர் என மொத்தம் 30,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கு சாவடி மையங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைத்தது சிறப்பு கண்காணிப்பு குழு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளும் தேர்தல் ஆணையத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் அதிரடி நீக்கம் – கேரள அரசு நடவடிக்கைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM