சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் அருகே வீரகனூர் அமைந்துள்ளது. வீரகனூரின் பகடப்பாடி பகுதியில் 60 வயதான பெண்மணி ஒருவர் வசித்து வந்த நிலையில், அவர் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தன்னுடைய உறவினர் வீட்டிற்கு அந்த பெண் சென்றபோது, அதே பகுதியில் வசித்து வரும் ராமமூர்த்தி என்பவரின் மகன் (ஸ்ரீதர் 22) வயது தன்னை பலாத்காரமாக தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
அத்துடன் அந்த மூதாட்டி கத்தி கூச்சலிட்டதால் பயந்து அங்கிருந்து ஓடி விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தினால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞர் ஸ்ரீதரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஸ்ரீதர் சிறையில் அடைக்கப்பட்டார்.