பிக்பாஸில் ஹாட் டாபிக்காக இருப்பவர் தனலட்சுமி. ஆரம்பத்தில் ஜிபி முத்துவுடன் வம்புக்கு சென்றவர் அடுத்ததாக அசீமுடன் சண்டை இழுத்தார். தற்போது வீட்டில் இருக்கும் அனைவரும் அவரிடம் பேசவே அச்சப்படும் அளவு அவரது செயல்பாடு இருக்கிறது. குறிப்பாக இந்த வார ஸ்வீட் செய்யும் டாஸ்க்கில் பொருள்களை எடுப்பதில் தனலட்சுமி இரக்கமின்றி விளையாடினார். யார் பேசினாலும் எரிந்து விழுவது, தன்னைவிட மூத்தவர்களை மதிக்காமல் இருப்பது என தனலட்சுமியின் ஒவ்வொரு செயல்பாடும் அதிரிபுதிரியாகவே இருக்கிறது. குறிப்பாக மணிகண்டனுடன் அவர் போட்ட சண்டைதான் இந்த வாரத்தின் ஹைலைட் எனலாம். அந்த அளவுக்கு ஏதோ உடலுக்குள் புகுந்தது போல் கத்தி கூப்பாடு போட்டார்.
இந்நிலையில் அவரது நண்பர் ஒருவர் தனலட்சுமி குறித்து பகிர்ந்திருக்கும் விஷயங்கள் தனலட்சுமியின் இன்னொரு முகத்தை காண்பிப்பதாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் பிக்பாஸிடம் தன்னுடைய கதையை தனலட்சுமி கூறும்போது தனக்கு தந்தை இல்லை. தன் தாய் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார். பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய குடும்பத்திலிருந்தே இந்த நிலைக்கு தான் வந்திருப்பதாக மிகவும் எமோஷனலாக பேசினார்.
ஆனால் தனலட்சுமியின் நண்பர் கூறுவது வேறுமாதிரியாக இருக்கிறது. யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த தனலட்சுமியின் நண்பர், “இரண்டு வருடங்களுக்கு முன், டிக்டாக் மூலம் நாங்கள் நண்பர்கள் ஆனோம். முதலில், தனலட்சுமிதான் எனக்கு மெசேஜ் செய்தார். ஒரு பிறந்தநாள் விழாவில் சந்தித்தோம். அங்கு அவரும் அவரின் அம்மாவும் வந்தார்கள். அப்போது தனலட்சுமி டிக்டாக்கில் ஃபேமஸ் கிடையாது. என்னுடன் டூயட் செய்தபிறகுதான் அவர் பிரபலமானார். பின்னர், ஒரு அவார்ட் விழாவிற்கு என்னை சப்போர்ட் செய்ய சொன்னார்.
அது ஸ்பார்க்லிங் அவார்ட், அதை தனலட்சுமிதான் நடத்தினார். அது ஈரோட்டில் நடந்தது. முதலில், அவர்தான் இந்த விழாவை எடுத்து நடத்துகிறார் என்று எனக்கு தெரியாது. பின்னர், அவர் வீட்டுக்கு ஒருமுறை சென்றுபோது அவர் மொபைல் மூலம், உண்மையை தெரிந்துகொண்டேன். அந்த விருது விழாவில் அவரே விருதை வாங்கிக்கொண்டார்.
அவரின் அம்மா துணிக்கடை ஒன்று வைத்துள்ளார். ஃபைனான்ஸ் செய்யும் தொழிலையும் செய்துவருகிறார். அவருக்கு அப்பாவும் உள்ளார். அவர் ஒரு மெக்கானிக் கடை வைத்துள்ளார். தனலட்சுமி வசதிதான். 12,000 ரூபாய் கொடுத்துதான் செருப்பு வாங்குவார்.
தனலட்சுமி பிக்பாஸில் கலந்துகொள்கிறார் என்று தெரிந்தவுடன் அந்த நிகழ்ச்சியை நாங்கள் பார்ப்பதை நிறுத்திவிட்டோம். அவர் மற்றவர்களிடம் எரிந்து விழுவார். மற்றவர்களிடம் குறை காண்பார். அவர் மீதுள்ள தவறை உணரவே மாட்டார். தலைக்கனம் பிடித்தவர். வேலை ஆகும்வரை நன்றாக பயன்படுத்திக்கொள்வார்.என்னை ஒரு விஷயத்தில் காவல் துறையை வைத்து மிரட்டினார்” என்றார்.
இதனையடுத்து தனலட்சுமியின் தாய் யூட்யூப் லைவ்வில் பேசுகையில், “தனலட்சுமிக்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது. அவருடைய நண்பர்கள் கூறியது அனைத்தும் பொய். தனலட்சுமியின் இயல்பானே குணமே கடுமையாக கோபப்படுவதுதான். அவளுக்கு 21 வயதுதான் ஆகிறது. போகப்போக புரிந்துகொள்வாள். அவள் கெட்டவள் கிடையாது. நிறைய நல்ல குணங்கள் அவளிடம் இருக்கிறது. தனலட்சுமி குறித்து ஏகப்பட்ட வதந்திகள் பரவுகின்றன.
தனலட்சுமிக்கு இதுவரை எந்த ப்ரோமோஷனும் செய்யவில்லை. தனலட்சுமி மிகப்பெரிய ஆள் ஒன்றும் கிடையாது. அவர் ஒவ்வொரு வீடியோவுக்கு 4,5 மணி நேரம் செலவு செய்வார். 12,000 ரூபாய்க்கு செருப்பு வாங்குவார், விருது விழா நடத்துவார், நான் துணிக்கடை வைத்திருக்கிறேன் என்று சொன்னதெல்லாம் சுத்த பொய்” என்றார்.