நடிகர் கவுதம் கார்த்திக் – நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் வருகிற 28-ம் தேதி நடக்க உள்ளது. இதில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.
பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக். இவர், ‘கடல்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின்னர், ‘இவன் தந்திரன்’, ‘ரங்கூன்’, ‘மிஸ்டர் சந்திரமவுலி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ‘தேவராட்டம்’ என்ற படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்தார். அப்போது, கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் ஒருவரையொருவர் காதலிக்கத் தொடங்கினர். இவர், ‘அச்சம் என்பது மடமையடா’, ‘துக்ளக் தர்பார்’, ‘எப்.ஐ.ஆர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில், இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, தங்கள் காதலை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இந்த ஜோடிக்கு தற்போது திருமண தேதி முடிவாகி உள்ளது.
கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் வருகிற 28-ம் தேதி நடக்க உள்ளது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். அதன்பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை திரை பிரபலங்களை அழைத்து நடத்த உள்ளனர்.