வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன் ஆகியோரை விடுவிக்கும் பணிகள் தொடங்கியது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் நகல்கள் தொடர்புடைய சிறைகளுக்கு அனுப்பப்பட்டன. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் சிறைத்துறைக்கு கிடைத்த நிலையில் சற்று நேரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நளினி காட்பாடியில் இருந்து வேலூர் பெண்கள் தனி சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட உள்ளார்.