ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த உக்ரைனின் கெர்சோன் பகுதியில் உள்ள அன்டோனிவ்ஸ்கி பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்திருக்கும் வீடியோவை ரஷ்யா வெளியிட்டுள்ளது.
டினிப்ரோ ஆற்றின் கிழக்குக் கரைக்கு செல்லும் ஒரே வழித்தடமாக அன்டோனிவ்ஸ்கி பாலம் இருந்தது. பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
டினிப்ரோ ஆற்றின் கிழக்குக் கரையில் இருந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படைவீரர்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று கூறியதாக இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.