தென்னிந்திய நடிகை சமந்தாவின் ‘யசோதா’ திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தாவின் நடிப்பில் இரட்டை இயக்குநர்களான ஹரீஷ் நாராயணன் – ஹரி சங்கர் இயக்கியுள்ள திரைப்படம் ‘யசோதா’. கதைப்படி பணத்திற்காக வாடகைத்தாய் முறையை தேர்ந்தெடுக்கும் சமந்தா, பின்பு அந்த வாடகைத்தாய் முறையை வைத்து நடக்கும் முறைகேடுகளை வெளிக்கொண்டு வருவதே ‘யசோதா’ திரைப்படத்தின் கதையாகும். மிகவும் சஸ்பென்ஸ் த்ரில்லருடன் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக நேற்று திரையரங்குகளில் வெளியானது.
The Riveting Action-packed emotion of our #Yashoda gets 6.32CR Gross WORLDWIDE on DAY 1
Don’t miss the thrill https://t.co/GtLWiMBXNM@Samanthaprabhu2 @varusarath5 @Iamunnimukundan @harishankaroffi @hareeshnarayan @krishnasivalenk @SrideviMovieOff pic.twitter.com/Wp2P4MWPgg
— Sridevi Movies (@SrideviMovieOff) November 12, 2022
இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் வசூல் நிலவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உலகம் முழுவதும் ரூ. 6.32 கோடி வரை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி நடித்திருந்தார். மேலும் உன்னி முகுந்தன். முரளி சர்மா, சம்பத் ராஜ், மாதுரிமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஸ்ரீதேவி மூவிஸ் தயாரித்திருந்தது. 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் முதல் நாளிலேயே முன்னணி நடிகர்களுக்கு இணையாக ரூ. 6.32 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.