நடிகை பிபாசா பாசு கர்ப்பமாகி இருப்பதை, இணையர்கள் இணைந்து சில மாதங்களக்கு முன் இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர். அதில்,”புதிய காலம், புதிய பகுதி, புதி வெளிச்சம் எங்களின் வாழ்வின் ஒளிரப்போகிறது. நாங்கள் தற்போது இருப்பதை விட இன்னும் சற்று உயரம் மேல போகப்போகிறோம். நாங்கள் இருவரும் தனியாக தனியாக எங்கள் வாழ்வை தொடங்கினோம்.
பின்பு இணைந்ததில் இருந்த எப்போதும் ஒருவர், நாங்கள் இருவர். எங்களிடம் இருந்த ஏராளமான அன்பு இருவருக்கு மட்டும்போதும் என்று நினைப்பது தவறாகபட்டது. எனவே, இன்னும் சிறிதுநாளில், நாங்கள் இருவர், மூவராகப் போறோம்” என குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து, பிபாசா பாசு உடல்நிலை குறித்து தொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டிருந்தன. மேலும், கர்ப்பமடைந்திருப்பதால், அவரின் இயல்பு வாழ்க்கை கடுமையாக மாறியுள்ளதாக பிபாசா பாசு ஒருமுறை கூறியிருந்தார். இருப்பினும் அவரது கணவர் கரண் சிங், அவருக்கு உறுதுணையாக இருந்ததாக கூறப்பட்டது.
தொடர்ந்து, நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து, பிபாசாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அதற்கு முன்பாக, குடும்பத்தினருடன் சேர்ந்து பாரம்பரியமான முறையிலும் வளைகாப்பு நடத்தப்பட்டது. அதில், சேலையில் இருந்த பிபாஷாவுக்கு, குடும்பத்தினர் பாரம்பரிய பெங்காலி உணவு வகைகளை ஊட்டிவிடும் புகைப்படங்களும் வெளியாகின.
பிபாசா பாசுவும், கரண் சிங்கும் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். கரணுக்கு இது மூன்றாவது திருமணம் என்பதால், பிபாசா பாசுவின் குடும்பத்தினர் சற்று தயக்கம் காட்டினர். இருப்பினும், இறுதியில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதி, தற்போது 8 ஆண்டுகளுக்கு தங்களது முதல் குழந்தையை பெற்றுள்ளது. அந்த தம்பதியினருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும், பிபாசா பாசுவுக்கு வயது 43 ஆகும்.