இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) தலைவி பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) தலைவி செவரீன் ஷப்பாஸ் (நவம்பர் 09) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த ஷப்பாஸ் அவர்களை பாதுகாப்பு செயலாளர் அன்புடன் வரவேற்றார்.

இந்த சந்திப்பின் போது ஜெனரல் குணரத்ன மற்றும் திருமதி ஷப்பாஸ் ஆகியோருக்கு இடையில் சுமுகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

பாதுகாப்பு செயலாளர் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் சேவைகளை பாராட்டியதுடன் அதன் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். இலங்கையில் செஞ்சிலுவை சங்கத்தின் செயற்பாடுகளுக்கு அளிக்கப்படும் ஆதரவுக்கு ஷப்பாஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளருக்கு நன்றி தெரிவித்தார்.

செஞ்சிலுவை சங்கத்தின் ஆயுதப்படைகள் பிரதிநிதி பிரதிநிதி திரு. அல்பேர்ட் ஷோனிவெல்ட் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பு அமைச்சு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.