இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் 105 வயது மூதாட்டி ஒருவர் தனது வாக்கை பதிவு செய்தார்.
80 வயதிற்கு மேற்பட்டவர்கள் இல்லத்தில் இருந்தே வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளை செய்திருந்த நிலையில், சம்பா மாவட்டத்தை சேர்ந்த நரோ தேவி என்ற 105 வயது மூதாட்டி நேரில் வந்து எந்திரத்தில் வாக்களிக்க விரும்புவதாகக் கூறி வாக்குப்பதிவு மையத்திற்கு வந்து வாக்களித்தார்.
உலகில் மிக உயரத்தில் உள்ள வாக்குப்பதிவு மையமான தாஷிகாங்கில்லும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 15 ஆயிரத்து 256 அடி உயரமான இப்பகுதியில் 52 வாக்காளர்கள் உள்ளனர்.