புதுச்சேரி: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அடுத்த மாதம் புதுவை வருகை தருகிறார் என புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் முதன்முறையாக 128 நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் நியமிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர், சட்டத்துறை அமைச்சர், பாஜக தலைவர் சாமிநாதன் என எல்லோருடைய பரிந்துரைகளையும் ஏற்று 225 பேர் அடங்கிய பட்டியல் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது.
இதில், 128 பேர் நோட்டரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்புதுச்சேரி சட்டசபைக்கு புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா, தியாக சுவர் திறப்பு மற்றும் மருத்துவ பல்கலைக்கழகம் துவக்க விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருமாறு பாரத பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதி பிரதமர் புதுச்சேரி வர வாய்ப்புள்ளது. இன்னும் தேதி இறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.