சிம்லா: இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 7,881 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அடுத்த மாதம் 8ம் தேதி குஜராத் சட்டசபை தேர்தல் வாக்குகளுடன் எண்ணப்படும். இமாச்சல் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வருமா? அல்லது காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா? என்பது டிசம்பர் 8ம் தேதி தெரிந்துவிடும்.