100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை ஈட்டிய கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படம், ஆஹா ‘ ஓடிடி தளத்தில் ஒரு மாதத்திற்குள்ளாகவே வெளியிடப்பட உள்ளது.
கார்த்தி, லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, சங்கி பாண்டே உள்பட பலர் நடிப்பில், தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘சர்தார்’. தண்ணீரை வைத்து நடக்கும் முறைகேடு மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் ஆகியவற்றை மையமாக வைத்து ஸ்பை ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருந்தது ‘சர்தார்’ திரைப்படம். கடந்த மாதம் 21-ம் தேதி வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனுடன் வெளியான சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தைக் காட்டிலும், நேர்மறையான விமர்சனங்களால் இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
இந்நிலையில், ஆஹா ஓடிடி தளத்தில் வருகிற நவம்பர் 18-ம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் வெளியிடப்பட உள்ளதாக ட்விட்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிட்டு இருந்தது. பி.எஸ். மித்ரன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். 12 நாட்களிலேயே இந்தப் படம் சுமார் 85 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதை அடுத்து இயக்குநர் பி.எஸ். மித்ரனுக்கு, தயாரிப்பாளர் லக்ஷ்மண் லான்சன் புதியக் கார் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Ee Season Athi Pedda Blockbuster Cinema, Biggest Box-office Sensation, Mass Action Blockbuster, Karthi’s SARDAR mee Aha lo November 18 nundi.#SardarOnAHA @Karthi_Offl @Prince_Pictures @RedGiantMovies_ @Psmithran @gvprakash @lakku76 @AnnapurnaStdios @ActressLaila pic.twitter.com/CJooQy7j54
— ahavideoin (@ahavideoIN) November 11, 2022