சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில், தில்லை காளியம்மன் கோயில், இளமையாக்கினார் கோயில் உட்பட ஆன்மீக தலங்கள் உள்ளது. கடந்த ஆட்சியில் இளமையாக்கினார் கோயில் குளத்தின் சுற்றுச்சுவர் சீரமைப்பு பணிக்காக ரூ.2.60 கோடி ஒதுக்கப்பட்டு, சுற்று சுவர் கட்டப்பட்டது. மூன்று சுற்றுசுவர் மட்டும் கட்டப்பட்ட நிலையில், கீழக்கரை பகுதி உள்ள சுற்று சுவர் மட்டும் கட்டப்படாமல் வர்ணம் பூசி வைத்துள்ளனர்.
இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையால் கடந்த சில நாட்களாக சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
நேற்று பெய்த கனமழையில் இளமையாக்கினார் கோயிலில் கீழக்கரை பகுதியில் உள்ள சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. அதனை தொடர்ந்து சேதம் அடைந்த பகுதியை நகராட்சி ஆணையர் அஜிதாபர்வீன் பார்வையிட்டு பணிகளை மேற்கொள்வதற்கு வேண்டிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிப்பதாகவும் கூறினார். அப்போது, நகர மன்ற உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் உடன் இருந்தார். இளமையாக்கினார் கோயில் சுற்றுச்சூவர் இடிந்து விழுந்ததால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.