சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் 2-வது நாளாக இன்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் பெயர்களை புதிதாக சேர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜன.1-ம் தேதி தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர்களைசேர்த்தல் மற்றும் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கான சிறப்பு முகாம்கள்தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் (மழை பாதிப்பு உள்ள இடங்கள்தவிர்த்து) நேற்று நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம் இன்றும் நடைபெறுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். மேலும், வரும் நவ.26, 27-ம் தேதிகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.