உலக வர்த்தக மையத்தில் அலுவலகம் நடத்தி மோசடி செய்த திலினி பிரியமாலியிடம் பணம் முதலீடு செய்தவர்களிடம் வாக்குமூலம் பெற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.
திலினி பிரியமாலி மற்றும் சந்தேகநபர்கள் வழங்கிய சாட்சியங்கள் மற்றும் அவரது அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் முறைப்பாடு செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் காத்திருப்பதாகவும், ஆனால் அது நடக்காததால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் உண்மைகளை அறிக்கை செய்த பின்னர் இந்த வாக்குமூலங்கள் பெறப்படும் என்றும் பொலிஸ் தலைமையகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.