மும்பை,-பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான், மும்பை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
பாலிவுட் நடிகர் ஷாருக் கான், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜா நகரில் நடந்த சர்வதேச புத்தக திருவிழாவுக்கு சமீபத்தில் சென்றிருந்தார்.
அங்கிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில், அவர் மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.
அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறுகையில், சுங்கத் துறை அதிகாரிகள் அவரையும், அவரது உதவியாளர் மற்றும் பாதுகாவலர்களையும் தடுத்து நிறுத்தினர்.
ஷாருக், தன்னுடன் எடுத்து வந்த விலை உயர்ந்த கைக்கடிகாரங்களுக்கு சுங்க வரி செலுத்தினால் தான் வெளியே அனுப்ப முடியும் என்றனர்.
இதையடுத்து, அவர் 6.83 லட்சம் ரூபாய் சுங்க வரி செலுத்தினார். பின் ஷாருக் மற்றும் அவரது உதவியாளரை மட்டும் செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர்.
‘ஷாருக் கான், வரி செலுத்தாமல், 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரங்களை வெளியே எடுத்து செல்ல முயன்றார்’ என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement