தொடர்ந்து காப்பீட்டு தொகை ரூ.5 லட்சம் நிதியுதவி இந்த குடும்பத்திறகு விரைவில் வழங்கப்படும். அத்துடன் அவரது குடும்ப சூழ்நிலை கருதி கல்வி தகுதிக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்ந்தெடுக்கும் வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும். 3 பெண் குழந்தைகளின் படிப்பிற்கான செலவை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் சபாநாயகர் அப்பாவு உறுதியிளித்தார்.
நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், உதவி இயக்குநர் மோகன்குமார், திசையன்விளை தாசில்தார் ராஜேந்திரன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ஒன்றிய பிரதிநிதி அருணா டென்சிங், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரமேஷ், உவரி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அந்தோனி, அல்போன்ஸ், கூட்டப்பனை ஜோன்ஸ், ஜான்சன், அமெச்சியார், கிஷேர்பாண்டியன் பங்கேற்றனர்.