குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த இரு தினஙகளாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக அனைத்து அருவிகளிலும் நேற்றிலிருந்தே தண்ணீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
காலை முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து வந்த நிலையில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பழைய குற்றால அருவி படிகளில் தண்ணீ வரத் துவஙகியது. பிரதான அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டியது.
இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு அருவி பகுதியில் இருந்து சில மீட்டர் தொலைவில் கயிறு கட்டி சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு தடை விதிக்கப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM