கேரள மாநிலம் கோட்டயத்துக்கு நவம்பர் 21ம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை திங்கள்கிழமைகளில் கா்நாடக மாநிலம் விஜயபுராவில் இருந்து இரவு 11 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 07385) இயக்கப்படுகிறது.
இந்த ரயில், புதன் கிழமைகளில் பிற்பகல் 2.20 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்தை சென்றடையும். இதே போல் நவம்பா் 23ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை புதன்கிழமையில் கோட்டயத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்கு கிளம்பி, வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 07386) வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு விஜயபுரா சென்று அடையும்.
இந்த ரயில் எர்ணாகுளம் டவுன், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காரப் பேட்டை, கிருஷ்ணராஜ புரம், தும்கூர், திப்தூர், பிரூா், ஹரிஹர், ராணிபென்னூா், பாகல்கோட், அல்மட்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
இதே போல் கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ஆலப்புழா-சென்னை விரைவு ரயில், போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் மங்களூரு சென்ட்ரல் -சென்னை சென்ட்ரல் விரைவு ரயிலின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.
மேலும், போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படுகிற மங்களூரு சென்ட்ரல் – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண்: 12602) மங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படுவதற்கு பதிலாக 1.35 மணிக்குப் புறப்படும்.
இந்த ரயில் போத்தனூருக்கு இரவு 9.55 மணிக்கும், திருப்பூருக்கு 10.45 மணிக்கும், ஈரோட்டுக்கு 11.40 மணிக்கும் சென்று அடையும். சென்னைக்கு மறுநாள் காலை 6.10 மணிக்கு சென்றடையும். இவ்வாறு சேலம் கோட்ட ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.